ஞானிகளும் மனிதர்களும்

Water_Spirtiual Power_0

சிறந்த ஆன்மீக குருநாதர்கள் பாரதத்தில் இல்லாத காலமே இல்லை என்று சொல்லலாம். ஆனால் அவர்கள் எல்லோருமே உலகினர் அறியும்படி வாழ்வதில்லை. ஒரு ஞானி தன்னைப் பார்க்க யாராவது வந்தால் கல்லை வீசி துரத்துவாராம். மற்றும் பலர் முட்டாள்களின் கூட்டத்தில் இருந்து தப்பிக்க மனித சமுதாயத்திலிருந்தே விலகிச் சென்று விடுவார்கள். என்றாலும் சில ஆன்மீக குருக்கள் மக்களிடையே வாழ்ந்து வந்தனர். நவீன காலத்தில் சில குருக்கள் தம்மைப் பற்றி கடுமையாக விமர்சிக்க்கூடிய பத்திரிக்கை மற்றும் தொலைக் காட்சி நிருபர்களை அழைத்தே கேள்விகளை எதிர் கொள்கின்றனர்.

மகரிஷி மகேஷ் யோகி ஒரு அமெரிக்க தொலைக்காட்சி நிருபருக்கு பேட்டி அளித்த போது புன்னகை மாறாமல் காணப்பட்டார். “நீங்கள் ஏன் புன்னகைத்துக் கொண்டே இருக்கிறீர்கள்?”, என்று கேட்டார் நிருபர். அதற்கு அவர் ‘வாழ்க்கை இன்ப மயம்’ என்றார். “அப்படியா?”, என்று கேட்டுவிட்டு மிகக் கடினமான கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தார் நிருபர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு பேட்டியை முடிக்கும்போது, அப்பொழுதும் அமைதியாக புன்னகைத்துக் கொண்டிருந்த குருவிடம், கேட்டார்: உங்களால் எப்படி எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க முடிகிறது? மீண்டும் அதே பதில் வந்தது: வாழ்க்கை இன்ப மயம். “உண்மை தானென்று நினைக்கிறேன்”, ஏற்றுக்கொண்டார்  நிருபர்.

ஒஷோ ரஜ்னீஷ் அளித்த பல பேட்டிகள் சிந்தனை ஒளி மிகுந்தவை. அவர் என்ன தான் குற்றங்கள் செய்திருந்தாலும் அவருடைய பல தீர்க்கமான, தெளிவான, நகைச்சுவை மிக்க விமர்சனங்கள் நிகரற்றவை.

இவ்வழியில், தற்போது சாதனைகள் புரிகிறார் சத்குரு வாசுதேவ். பிரபலமான ஒரு நிருபர் சில நாட்களுக்கு முன் அவரைக் கேட்டார், “குரு தேவையா?”. உனக்கு காரை ஓட்டிச் செல்ல GPS தேவைப் படுகிறது. அது சொல்லும்படி எல்லாம் செய்கிறாய், ஏனென்றால் உனக்கு  வழி தெரியாது, அதற்குத் தெரியும். அதே போல் தான் குருவும்.   நிஜத்தில் GPS என்றால் Guru Positioning System என்று நிருபர் உட்பட அனைவரின் ஆமோத ஆரவாரத்தைப் பெறுகிறார் சத்குரு வாசுதேவ்.

உலகெங்குமுள்ள தம்முடைய ஆயிரக்கணக்கான ஆர்வலர்கள் மிகவும் ஒற்றுமையுடன் செயல்படுவதாகவும், தம்முடைய ஆசிரமத்தில் கம்யூனிசம் கடைபிடிக்கப்படுவதாகச் சொல்கிறார். ஆனால் கம்யூனிசம் தாமாக நிகழ வேண்டுமென்றும், கட்டாயக் கம்யூனிசம் மோசமானதென்றும் கூறுகிறார்.

சுவாரஸ்யமான இன்னும் பல விளக்கங்கள் அடங்கிய இந்த ஆங்கிலப் பேட்டியை இங்கே சொடுக்கிக் காணலாம்: In conversation with a mystic

Advertisements

Tagged: , ,

One thought on “ஞானிகளும் மனிதர்களும்

  1. Ravi April 6, 2015 at 2:33 am Reply

    ஜோதி தங்களுடைய தமிழ் பதிவு சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s